ebay noscript திரையை நீக்க பயனர் உரைநிரல்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: javascript, மென்பொருள், greasemonkey

ebay யில் noscript திரையை நீக்கி javascript இல்லாமல் உலாவ அனுமதிக்கும் greasemonkey பயனர் உரைநிரல்…

noscript திரையினால் மறைக்கப்பட்ட ebay இணையத்தளம்

Figure 1: noscript திரையினால் மறைக்கப்பட்ட ebay இணையத்தளம்

noscript திரை பயனர் உரைநிரலால் நீக்கப்பட்டப் பிறகு

Figure 2: noscript திரை பயனர் உரைநிரலால் நீக்கப்பட்டப் பிறகு

தனியுடைமை மென்பொருள் போன்று தனியுடைமை javascript யும் மென்பொருள் விடுதலைக்கு இடையூறானது. மேலும் அறிய, ரிச்சர்ட் ஸ்டால்மனின் கட்டுரை "The Javascript Trap" யைப் படிக்கவும். மற்ற மென்பொருள் போன்று, Javascript கணினியில் நிலைத்திருப்பதில்லை. இந்த நிலையற்ற பண்பினால், javascript கட்டற்ற மென்பொருளாக இருந்தாலும், உங்கள் நான்கு மென்பொருள் உரிமைகளை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம். இதைப் பற்றின பகுப்பாய்விற்கு, மைக் கெர்விட்ஸ் LibrePlanet 2016 மாநாட்டில் வழங்கிய உரை "Restore online freedom" யைக் காணவும்.

தற்காலத்தில், பல இணையத்தளங்கள் javascript இல்லையெனில் சீர் குலைந்து செயலிழந்துவிடும். ஆனால், ebay போன்ற சில இணையத்தளங்கள் javascript இல்லாமல் அரைகுறையாக செயல்படும். இருப்பினும், அவை noscript திரை கொண்டு பக்கத்தை மறைத்து செயல்பட மறுக்கின்றன. இந்த திரையை நீக்கி இத்தடங்கலை மீற noscript யின் CSS display பண்பை none ஆக மாற்றுவதற்கு எளிய (greasemonkey) பயனர் உரைநிரல் ஒன்றை எழுதினேன்.

var style = document.createElement("style");
style.innerHTML = "noscript { display: none; }";
document.body.appendChild(style);

இந்த பயனர் உரைநிரலை greasyfork.org யிலேயோ அல்லது கீழ்காணும் பதிவிறக்கத் தொடுப்பிலேயோ பெறலாம்.

பதிவிறக்கங்கள்